Wednesday, 5 October 2011

நாணயம் ( சிறுகதை)

தஞ்சையில் பெருவுடையார் கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்த  காலம், பதினோராம் நூற்றாண்டு 1004 (கி. யு).

தமிழ்ச்செல்வன் அங்கு சிற்பியாக பணி புரிந்து வந்தான். கதிரவன் மறையும்
நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது அடுத்த சிலைக்கு தேவையான கருங்கல்லை நுட்பமாக தேர்ந்தெடுத்து, தனது கூடாரத்தில் வைத்தான் .

வேலையை மட மட வென முடித்துக் கொண்டிருந்தான். அகத்தின்
மகிழ்ச்சி புன்னகையாய் முகத்தில் வெளிப்பட்டது. தனது கூடாரத்திலிருந்து
வெளியே வந்த தமிழ்ச்செல்வன்,  " குணசேகரா! " என்று அருகே இருந்த மற்றொரு கூடாரத்தை நோக்கி, உரத்த குரலில் கூப்பிட்டான்.

" என்ன தமிழ்ச்செல்வா? உன் வேலை முடிந்ததா? நாம் ஊருக்கு புறப்படுவோமா? " என்று மகிழ்ச்சியுடன் வினவினான் குணசேகரன்

" ஆம் நண்பா ! நான் தயார் ! ராஜசேகரன் எங்கு இருக்கிறான்? "  என்றான் தமிழ்ச்செல்வன்.

" அவனா! அவன் அங்கு நாட்டியப் பயிற்சியை மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை .. யாராவது அதிகாரி அவனை கையும் களவுமாக பிடித்தால் என்ன ஆகும் ? அந்த முட்டாளுக்கு நான் சொல்வது ஒன்றும் புரியவில்லை! " என்று பெருமூச்சு விட்டான் குணசேகரன்

" சரி வா.. நாம் அவனை அழைத்துச் செல்வோம்" என்று தமிழ்ச்செல்வன் கூற,
ராஜசேகரனை நோக்கி இருவரும் நடந்தனர்...

                    
                                                                                                    -  தொடரும் ........

3 comments:

melten said...

Yennappa yenna achu? usa wil
oru thamizh Pulavana ?????????

melten said...

by nirmala....

Vijayabharath Jaganathan said...

This is not a poem athai..its a short story .. Keep checking for further updates... :-)